ஜப்பான் பெற்றோரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 குணங்கள்

ஜப்பானில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மற்றவர்களைவிட ஜப்பானியர்கள் வித்தியாசமாக இருக்கின்றனர்.

ஒரு குழந்தை வளர்ப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல. ஏன் அழுகிறது? எதற்கு அழுகிறது? என்று தெரியாது. ஆனால் குழந்தையின் அழுகையை வைத்து குழந்தைக்கு என்ன தேவை என்று தனது தாய் புரிந்து கொள்வார்கள். அந்த குழந்தையை ஆரோக்கியமாகவும் அன்பாகவும் வளர்ப்பார்கள். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் உலகமெங்கும் ஜப்பானியர்கள் குழந்தையை வளர்க்கும் முறையை கண்டு சற்று ஆச்சரியப்படுகிறார்கள்.

பொதுவாக ஜப்பானில் எந்த குழந்தையும் பொது இடத்தில் அழுவதை பார்ப்பது சிரமம். மேலும் எந்த வயதாக இருந்தாலும் பொது இடத்திலும் பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றனர். இவ்வாறு ஜப்பானிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஐந்து விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

அனைவரும் சமம்

சமீபத்தில் ஜப்பானிய பள்ளி ஒன்றில் மாணவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்வது போன்று வீடியோ வைரலானது. இதனை பார்த்து நெட்டிசன்கள் சிலர் ஆச்சரியப்பட்டனர். ஒரு சிலர் விமர்சித்தனர். ஆனால் தாங்கள் இருக்கும் இடத்தை தாங்கள் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் அனைவரும் இங்கு சமம் என்ற எண்ணத்தை இங்கு மாணவர்களின் மனதில் விதைக்கிறார்கள். இந்த எண்ணம் நாளுக்கு நாள் அவர்கள் வளர வளர, இந்த சமூகத்தில் அனைவரும் ஒன்றாக எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி வாழ்வதற்கு வழிவகுக்கிறது.

பெற்றோரின் கடமைகள்,
நல்ல பெற்றோர்கள்,
பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
பெற்றோர்கள் பிள்ளைகள்,

பெற்றோர் பிள்ளைகள் இடையேயான உறவு

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவு மிகவும் உறுதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு நல்ல எண்ணங்களே பெற்றோர்கள் கூறி வளர்க்கமுடியும். மேலும் குழந்தைகள் சில தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து நல்ல விஷயங்களை மட்டும் கற்றுக் கொள்வார்கள். ஜப்பானிய அரசாங்கமே பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. குழந்தைகளே மழலை பள்ளிக்கு மூன்று வயதுக்குப் பிறகுதான் அனுப்புகிறார்கள் அதுவரைக்கும் பெற்றோர்கள் அரவணைப்பில் இருக்கும்.

குழந்தைகளின் உணர்ச்சிக்கு மதிப்பளிப்பது

குழந்தைகள் வளரும் வயதில் அதிகம் சேட்டை செய்வார்கள். குழந்தைகளின் உணர்ச்சிக்கு அவர்கள் மதிப்பளிப்பார்கள். குழந்தைகள் சேட்டை செய்யும் போது சில தவறுகள் நடக்கலாம் அல்லது சில நல்லதையும் செய்யலாம். ஒரு நல்லது செய்தால் அவர்களை பாராட்டி அதே போல் தவறு செய்தால் அவர்களை கண்டித்தும் நல்ல பண்புகளை எடுத்துரைப்பார்கள். இதனால் வருங்காலத்தில் குழந்தைகள் இந்த சமூகத்தில் எவ்வாறு வாழ்வது என்பதை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

பொது இடத்தில் நடப்பது குறிப்பு

பொது இடத்தில் தங்களைத் தாங்களே சுத்தமாக வைத்திருப்பதற்கும், ஒழுக்கத்துடன் நடப்பதற்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். தேவையற்ற இடத்தில் குப்பை போடுவது போன்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்காது. மேலும் தங்கள் குழந்தைகளின் நற்குணங்களை பொது இடத்தில் பேசுவதில் பெற்றோர்கள் பெருமை அடைகின்றனர்.

குழந்தைகளுக்கான சமையல்

குழந்தைகளுக்கு சமையல் செய்யும் பொழுது அவர்கள் அதனை ரசித்து செய்கிறார்கள். மேலும் அந்த உணவு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் குழந்தைகள் சாப்பிடும் பொழுது போரடிக்காமல் அவை அனைத்தையும் சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக வாழ்வார்கள். உலகில் அதிக ஆரோக்கியமாக வாழ்பவர்களில் ஜப்பானியர்கள்தான் அதிகம். அதனால்தான் அவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் மிகவும் கவனத்தோடு ஆரோக்கியத்தோடு கையாளுகின்றனர்.