மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்

மல்லிகையில் ஜாதிமல்லி, குண்டுமல்லி, முல்லை, பவள மல்லி என பல வகைகள் உண்டு. இதில் ஜாதி மல்லி கொடியாக வளர கூடியது.

வருடத்தில் ஆவணி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை அதிகளவில் கிடைக்கும். மல்லிகையில் மற்ற பூக்களை விட ஜாதிமல்லி தான் அதிக வாசனை இருக்கும்.

மல்லிகைப்பூ அத்தர் ஜாதி மல்லி பூவிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. மேலும் இதில் மருத்துவ குணங்களும் உள்ளது.

உடலில் எந்த இடத்தில் அடிபட்டு இருந்தாலும் மல்லிகைப் பூவை அரைத்து வீக்கமுள்ள இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் வீக்கம் நீங்கிவிடும்.

மல்லிகைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் சொறி சிரங்கு, உடல் அரிப்பு நீங்கும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு மல்லிகைப் பூ எடுத்து, அரை டம்ளராக வரும்வரை காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் கோளாறு நீங்கும்.

2 கப் மல்லிகைப் பூக்களை எடுத்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தலும் மணமாக இருக்கும்.

வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்குவதற்கு அரைத்த சந்தனத்துடன் மல்லிகைச் சாறு கலந்து, கருமை உள்ள இடத்தில் பூசி வந்தால் கருமை நீங்கும். தேவைப்பட்டால் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி, பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் கரைந்து போகும்.

மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

Recent Post