‘டிவிட்டரில் இயேசு’ உடனே கிடைத்த ப்ளூ டிக்..!

எலான் மஸ்க் கடந்த மாதம் டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். விலைக்கு வாங்கியது முதல் தினமும் எலான் மஸ்க் குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்தபடியே உள்ளன.
டிவிட்டர் தனது வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக, டிவிட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு நீக்கினார்.

ட்விட்டரில் ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
கடந்த 9ம் தேதி இயேசு கிறிஸ்து என்ற பெயரில் உள்ள கணக்குக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டு உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் உலகத்தை மீட்க வந்த இரட்சகர் இயேசு நாதர் ப்ளூ டிக் பெற்றுள்ளார் என கலாய்த்து வருகின்றனர்.