ரஜினி, தனுஷ் வீட்டிலும் கைவரிசையா? : ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு – இப்போ என்ன நிலவரம்?

பிரபல இயக்குநரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு நகைகள் பெரிய அளவில் கொள்ளை போனது தெரிய வந்தது. உடனடியாக அவர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க தொடங்கினார், இதில் அவருடைய வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்ற பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவருடைய வீட்டிலும், அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் ஈஸ்வரி, ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த கார் டிரைவருடன் இணைந்து நகைகளை திருடி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஈஸ்வரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன, ஆனால் தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் அவர் அளித்த நகைகளின் விவரத்தை தாண்டி அதிக அளவில் ஈஸ்வரியின் வீட்டில் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இது போலீசாரை குழப்பமடைய செய்துள்ளது.
சிறிது சிறிதாக திருடியதை வைத்து கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்து கொடுத்தது மட்டுமல்லாமல் மற்றொரு மகளுக்கு திருமணம் செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த பெண் அடிக்கடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீட்டிற்கும் சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு ஏதேனும் நகைகள் காணாமல் போய் இருக்குமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஈஸ்வரியின் வீட்டிலிருந்து தற்போது போலீசார் மீட்ட நகைகளுக்கு கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இருப்பதினால் ஐஸ்வர்யாவின் லாக்கரையும் சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.