“இந்திய அளவில் மாபெரும் சண்டைக்காட்சி கொண்ட படம்”.. ஜெயம் ரவி பட மாஸ் அப்டேட்!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக காத்திருக்கும் ஒரு திரைப்படம் தான் ஜன கன மன. இந்த படத்தை வாமனன் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான அகமத் அவர்கள் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவி, டாப்சி பனு மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். பெருந்தொற்று காலத்தில் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது, மேலும் ஷூட்டிங் துவங்கியதும் அப்பொழுது போடப்பட்ட சில கட்டுப்பாடுகளால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தவித்து வந்தது.
அதன் பிறகு ஜெயம் ரவி அவர்களும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்துவந்தார். இந்நிலையில் பொன்னின் செல்வன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் மீண்டும் ஜெயம் ரவி தனது அடுத்த பட பணிகளில் இறங்கியுள்ளார்.
ஆகவே இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற செப்டம்பர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும், இன்னும் 50 நாள் ஷூட்டிங் மீதம் உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்திய அளவில் ஒரு மாபெரும் சண்டைக்காட்சி இந்த படத்தில் உருவாக உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாகவே தனது கதைத் தேர்வை மிகவும் நேர்த்தியாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.