ஜுங்கா திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபஸ்டின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் கோகுல், விஜய் சேதுபதி கூட்டணியில் 2013ம் ஆண்டு வெளிவந்த “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படம் செம ஹிட் ஆனது. அதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
கஞ்சத்தனம் கொண்ட டான் தனது பரம்பரை சொத்துக்களை காப்பாற்ற செய்யும் வேலைகள்தான் ஜூங்கா படத்தின் கதை.
பேருந்து நடத்துனராக வரும் ஜுங்கா(விஜய் சேதுபதி) அதே பேருந்தில் பயணம் செய்யும் மடோனா செபாஸ்டினை காதலிக்கிறார்.
ஜுங்காவின் தாத்தா லிங்கா மற்றும் அப்பா ரங்கா ஆகியோர் மிகப்பெரிய டான். அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் இந்த விஷயத்தை விஜய் சேதுபதிக்கு தெரியாமல் வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அப்பா, தாத்தா பெரிய டான் என்றும், அவர்களுக்கு சொந்தமாக ஒரு தியேட்டர் இருந்ததாகவும் கூறுகிறார்.
தனது குடும்பம் ஒரு டான் குடும்பம் என்று தெரிந்த விஜய் சேதுபதி சென்னைக்கு வந்து சின்ன சின்ன கட்டப் பஞ்சாயத்துகளை செய்து டானாகிறார். அதே நேரத்தில் மற்றொரு டானான ராதாரவி விஜய் சேதுபதியை பழிவாங்குவதற்க்காக தியேட்டரை இடிக்க திட்டம் போடுகிறார்.
தியேட்டர் உரிமையாளரான சுரேஷ் மேனனை சந்தித்து தியேட்டரை வாங்க முயற்சி செய்கிறார். ஆனால் சுரேஷ் மேனன் விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். இதனால் அவரை பழிவாங்க அவரது மகள் சாயிஷாவை கடத்த பாரிஸ் செல்கிறார். அங்கு சாயிஷாவுக்கு பாதுகாப்பு ஆட்கள் இருந்தாலும் அவரை கடத்துவதற்கு முயற்சி செய்கிறார்.
இறுதியில் சாயிஷாவை கடத்தினாரா? தனது தியேட்டர் மற்றும் சொத்துக்களை கைப்பற்றினாரா? மடோனா செபாஸ்டியன் காதல் என்னவானது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பேருந்து நடத்துநர், கஞ்ச டான், பணக்கார டான் என வித்தியாசமான கெட்-அப்புகளில், வரும் விஜய் சேதுபதி வழக்கம்போல் ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் சேதுபதி படத்தில் நடித்ததோடு இல்லாமல் இந்த படத்தை தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். யோகி பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ஜூங்கா “செம”