கபசுர குடிநீர் எப்படி செய்வது?

இந்த கபசுர குடிநீர் என்பது ஆயுஷ் துறையும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையமும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களுக்கும் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக பரிந்துரை செய்துள்ளன.

சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, நீர்முள்ளி வேர், அக்ரகாரம், சிறுகாஞ்சொரிவேர், ஆடாதோடை, கருக்காய் தோல், கோஸ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு, நிலவேம்பு, வட்டத்திருப்பிவேர், கோரைக்கிழங்கு, சிற்றரத்தை, கற்பூரவல்லி இலை, அதிமதுரம், தாளிசபத்திரி உள்ளிட்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்த கபசுர குடிநீர்.

kabasura kudineer ingredients in tamil

சுவாசக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு, காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இது உதவுகிறது.

இந்த கபசுர குடிநீர் பொடியை 5 கிராம் எடுத்து, 250 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 50 மில்லியாக சுண்டியவுடன் வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம்.

  • 2 முதல் 5 வயது வரை: 5 மில்லி குடிக்கலாம்.
  • 6 முதல் 8 வயது வரை: 10 மில்லி குடிக்கலாம்.
  • 9 முதல் 12 வயது வரை: 20 மில்லி குடிக்கலாம்.
  • 13 முதல் 15 வயது வரை: 30 மில்லி குடிக்கலாம்.
  • 15 வயதுக்கு மேல் 50 மில்லி குடிக்கலாம்.

கர்ப்பிணிகளும் கைக்குழந்தைகளும் மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்வது நல்லது.