கடைசீல பிரியாணி திரை விமர்சனம்

வசந்த் செல்வன், ஹக்கீம் ஷாஜகான், விஜய் ராம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிஷாந்த் கலிதிண்டி என்ற புதுமுகம் தயாரித்து, இயக்கி உள்ள படம் கடைசீல பிரியாணி.
தனது தந்தையை கொன்ற கேரளா ரப்பர் எஸ்டேட் அதிபர் ஒருவரை கொலை செய்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மூன்று இளம் வயது ஆண்கள் திட்டமிட்டபடி அவர்களை கொலை செய்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் முதல் பாதியில் அண்ணன் தம்பிகள் மூவரும் அந்த எஸ்டேட் அதிபரை தேடுகின்றனர். பிறகு அந்த எஸ்டேட் ஓனரை கொலை செய்கிறார்கள். கொலை செய்து விட்டு தப்பி ஓடும் அவர்களிடம் விதி விளையாடுகிறது.
இடைவேளைக்கு பிறகு படம் சுவாரஸ்யமாக செல்கிறது. சில காட்சிகள் கைதட்டல் வாங்கும் அளவிற்கு ரசிக்க வைக்கிறது. படத்தில் அண்ணன் தம்பிகளாக வரும் வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் நடித்துள்ளனர். இதில் மூத்த மகனாக நடித்திருக்கும் செல்வம் பழிவாங்கும் உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாத படி வன்முறைக் காட்சிகளும், வசை மொழிகளும் நிரம்பி இருக்கின்றன. வசனங்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
விஜய் சேதுபதியின் குரலில் துவங்குகிறது இக்கதை. அதேபோல், இறுதிக் காட்சியில் ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தி கதையை கச்சிதமாக முடித்து வைக்கிறார் விஜய் சேதுபதி. ஒரே ஒரு காட்சியில் விஜய் சேதுபதி வந்தாலும் அது படத்திற்கு நல்ல நிறைவை தருகிறது.
மொத்தத்தில் கடைசீல பிரியாணி – வெறும் குஷ்காதான்.