கடுகுரோகிணியின் மருத்துவ பயன்கள்

கடுகுரோகிணி இமயமலைப் பகுதியில் ஏறத்தாழ 2700 முதல் 4500 மீட்டர் உயரத்தில் இயற்கையாகவும் பயிரிட்டு வளர்க்கின்றனர். குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் இவை கிடைக்கிறது. இந்தச் செடியின் வேர்கள், கிழங்கு போன்ற கெட்டியான தன்மை கொண்டது.

கடுகுரோகிணியில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், மூக்கடைப்பு ஏற்படுவது குறைகிறது. சுவாசப் பாதையில் உள்ள அடைப்பு திறக்கப்பட்டு மாசுபடுத்திகளை வெளியேற்றுகிறது.

உடல் பலவீனம், ஜீரண குறைவு, பசியின்மை ஆகியவற்றை நீக்கும். ஈரல் சம்பந்தமான நோய், நரம்பு சம்பந்தமான நோய் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு நல்லது. உள் உறுப்பை சுத்தம் செய்வதுடன் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

Advertisement

மிதமான காய்ச்சல் இருக்கும் நாட்களில் கடுகுரோகிணி பொடியை உட்கொள்வதால் விரைந்த பலன் கிடைக்கும். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மூலிகை உதவுகிறது.

கடுகு ரோகிணியானது கசப்பு தன்மை வாய்ந்தது. கடுகுரோகிணியின் கசப்பு சுவை குறைய மிளகு, பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.