கமல் ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

சென்னை ராமசந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல் ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘விக்ரம்’ படம் வெற்றிக்கு பிறகு கமல், தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்த கமல், அங்கு பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் பிறந்தநாளில் கலந்துக் கொண்டார். சென்னை திரும்பிய கமலுக்கு உடல் சோர்வு, லோசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ராமசந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கமல்ஹாசன் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஒரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.