நடக்கப்போவதை முன்கூட்டியே கனவுகள் நமக்கு உணர்த்துவதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. நல்ல கனவு, கெட்ட கனவு என அடிக்கடி வந்து போகும். அந்த வகையில் உங்களுக்கு நாய் கடிப்பது போல் கனவு வந்தால் என்ன நடக்கும்? அது நல்லதா கெட்டதா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக கனவில் மிருகங்கள் வருவது ஆபத்து உங்களை நோக்கி வருவதற்கான அறிகுறி என்று கூறுவார்கள்.ஆனால் எந்த மிருகம் கனவில் வருகிறதோ அதனை பொறுத்து அதன் பாதிப்புகள் இருக்கும்.
நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்த உலகத்தில் நேர்மையும், விசுவாசமும் உள்ள மிருகம் என்றால் அது நாய்தான். நாய் கடிப்பது போல கனவு வந்தால் நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் கைகளை நாய் கடித்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் விரைவில் துரோகம் செய்ய போகிறார்கள் என்று அர்த்தம். இதனால் நீங்கள் நெருக்கடியான சூழலை அனுபவிக்க நேரிடும்.
வெள்ளை நிறத்தில் உள்ள நாய் உங்கள் கனவில் வருவது நல்ல அறிகுறியாகும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க போகிறார்கள் என்பதன் அறிகுறியாகும். வெள்ளை என்பது தூய்மை மற்றும் அமைதியின் அடையாளமாகும்.
ப்ரவுன் நிறத்தில் உள்ள நாய் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் மிகவும் மோசமான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம். ப்ரவுன் நிறத்தில் உள்ள நாய் கனவில் வருவது நல்ல அறிகுறி அல்ல.
கருப்பு நிறத்தில் உள்ள நாய் அடிக்கடி கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் பல சம்பவங்களை இது பிரதிபலிக்கும்.
நாய் துரத்துவது போன்ற கனவு வருவது உங்களை நோக்கி காதல் வரப்போகிறது என்பதன் அர்த்தம்.
நாய் கடிப்பது போல கனவு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். நாய் இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பம் ஏற்படும் என்று அர்த்தம்.