“அவர்கள் தான் தீவிரவாதிகள்”.. தி கேரளா ஸ்டோரி – கொதித்து பேசிய கங்கனா!

தி கேரளா ஸ்டோரி, கடந்த மே 5ம் தேதி உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பையும், அதே அளவிற்கு எதிர்ப்பையும் பெற்று வருகிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி 8 நாட்கள் ஆகி உள்ள நிலையில் சுமார் 100 கோடி அளவிற்கு வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் சுமார் 200 திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் இந்த திரைப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.
கேரளாவில் இருந்து, சுமார் 32,000 பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றி, அவர்களை தீவிரவாத இயக்கத்தில் இணைத்ததாக இந்த படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற மாபெரும் குற்றச்சாட்டு இந்த படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பலர் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த படத்தை கண்டு யாருக்கு மனம் குறுகுறுக்கிறதோ அவர்கள் தான் தீவிரவாதிகள் என்ற ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை கங்கனா ரணாவத்.
மேலும் “நான் இன்னும் அந்த படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், அதன் வெளியீட்டிற்குத் தடை விதிக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.