“கங்குவா என்றால் இதுதான் அர்த்தமா”.. தயாரிப்பாளர் சொன்ன சுவாரசிய தகவல்!

சூர்யா நடிப்பில், பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மாபெரும் பொருட் செலவில் தயாரித்து வெளியிட உள்ள திரைப்படம் தான் கங்குவா. கங்குவா, இதுவரை தமிழில் யாரும் இந்த பெயரை கேள்விப்பட்டதில்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை தற்பொழுது பகிர்ந்துள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா. அவர் வெளியிட்ட தகவலின்படி “கங்குவா” என்றால் நெருப்பிலிருந்து பிறந்த மனிதன் என்ற பொருள்படும் சொல்லாகும்.
ஏறத்தாழ 80 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இன்னும் 55 நாட்கள் படப்பிடிப்பு பணிகள் பாக்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா அவர்கள் இந்த கதையை தன்னிடம் கூறிய பொழுது சூர்யாவும், தானும் பிற பட பணிகளை ஒத்திவைத்து விட்டு உடனடியாக இந்த படத்தின் பணியை ஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கங்குவா படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமம், சுமார் 80 கோடிக்கு அமேசான் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது ஒரு மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. தமிழில் உருவாகும் அதிக பட்ஜெட் படமாக கங்குவா விளங்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.