காணிப்பாக்கம் விநாயகர் கோவில் வரலாறு

சென்னையிலிருந்து 175 கி.மீ. துரத்திலுள்ளது சித்தூர். அங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் பாகுதா நதி தீர்த்தத்தின் அருகில் ‘காணிப்பாக்கம்’ என் னும் கிராமத்தில் இந்த க்ஷேத்திரம் அமைந்துள்ளது.

kanipakam vinayaka temple history in tamil

முதலில் இதை ‘விகாரபுரி’ எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது இது ஒரு குக்கிராமம். தமிழக கர்நாடக எல்லையில் இது அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என புராணங்கள் கூறுகின்றன.

ஒரு குருடன், செவிடன், ஊமை மூன்று பேரும் சேர்ந்து அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தனர். இருவர் ஏற்றம் இறைக்க ஒருவர் தண்ணீர் பாய்ச்சி வந்தார்.

Advertisement

திடீரெனத் தண்ணீர் வற்றிப்போயிற்று. மூன்று பேரும் சேர்ந்து கிணறு வெட்ட எண்ணி, கிணறு வெட்ட ஆரம்பித்தனர். பாறையை வெட்டும் போது அந்தப் பாறையிலிருந்து இரத்தம் பீரிட்டது. அதைப் பார்த்த அந்த மூன்று பேரும் ஊர் மக்களை அழைத்து வந்து காண்பித்தனர். மக்கள் பார்த்து வியந்தனர். உடனே அந்த இரத்தத்தை தண்ணீர் ஊற்றி அபிஷேகம் போல் செய்தனர்.

அப்பொழுதுதான் விநாயகமூர்த்தி வெளிப்பட்டது. மூர்த்திக்கு தேங்காய் நிவேதயம் செய்ய முடிவுசெய்து தேங்காய் உடைத்தனர்.

தேங்காய் உடைத்த தண்ணீர் நிலத்தில் பட்டு நிலத்திலிருந்து தண்ணீர். ‘குபீர் குபீர்’ எனப் பீரிட்டு பாதிக்கு மேல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்குத்தான் காணி எனக் கூறப்படுகிறது.

‘காண்பாரகமே, காணிப்பாக்கம்’ எனத் தமிழில் மாறிவிட்டது. இந்தத் தண்ணீர்தான் வரும் பக்தர் களுக்குத் தீர்த்தமாக வழங்கப்படுகிறது.

இந்த க்ஷேத்திரத்திற்குச் சென்று நாம் நினைத்த காரியம் நிறைவேற வேண்டினால் உடனே நிறைவேற்றிக் குறையைத் தீர்த்து வைப்பார் காணிப்பாக்கம் அருள்மிகு சுயம்பு வரசித்தி விநாயகர்.

இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருக்கோயில் இது.