முன்னுரை:-
கரீனா கபூரின் டயட் பிளானாக அவர் பின்பற்றுவது பற்றி இந்த கட்டூரையில் தெளிவாக பார்க்கலாம்.
விளக்கம்:-
பாலிவுட் நடிகைகளில் வயசானாலும், அழகும் இளமையும் குறையாதவர் என்றால், அது கரீனா கபூர் தான். அதற்கு சாட்சியாக அவரது சமீபத்திய புகைப்படமே உள்ளது. இந்நிலையில், அவரது பிட்னஸ் சீக்ரெட் பற்றி ஊட்டசத்து நிபுணர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதி;ல், அவர் கூறியது பின்வருமாறு:-
கரீனா சாப்பிடும் உணவுகள்:-
1. காலை – தண்ணீரில் ஊற வைத்து பாதாம் பருப்பை கையின் அளவிற்கு எடுத்து சாப்பிடுவார்.
சிறிது நேரம் கழித்த பிறகு, பருப்பு சாதம், சப்பாத்தி, ரொட்டி, சாப்பிடுவார்.
பிறகு ஸ்நேக்ஷாக, பப்பாளி, ஆப்பிள் போன்ற பழவகைகள் சாப்பிடுவார்.
2. மதியம் – ஐந்தாவது உணவாக வெஜ் புலாவ், பாலக்கீரை அல்லது புதினா ரொட்டி மற்றும் பூந்தி ரைத்தா, பருப்பு சாதம் மற்றும் சப்ஜி சாப்பிடுவாராம்.
3. இரவு – மஞ்சள் பால்
உடற்பயிற்சிகள் பற்றி தற்போது பார்க்கலாம்..
முதல் நாள் – 20 நிமிடம் டிரெட்மில்
2-வது நாள் – யோகா
3-வது நாள் – ஓய்வு
4-வது நாள் – வீட்டிலேயே செய்யும் சாதாரண உடற்பயிற்சி
5-வது நாள் – 40 நிமிடம் டிரெட்மில்
6-வது நாள் – யோகா
7-வது நாள் – ஓய்வு
இவ்வாறு ஒவ்வொரு வாரமும் டைம் டேபிள் போட்டு உடற்பயிற்சி செய்வாராம்.