Search
Search

புகாரளிக்க வந்த பெண்ணைக் கன்னத்தில் அறைந்த பாஜக அமைச்சர்!

கர்நாடக மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வி.சோமண்ணா விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதற்காக நேற்று சாமராஜநகர் மாவட்டம் சென்றுள்ளார்.

அப்போது பெண் ஒருவர் தனக்கு நிலம் கிடைக்கவில்லை என அவரிடம் புகார் கூறினார். திடீரென கோபமடைந்த அவர் புகார் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

You May Also Like