Search
Search

இருமல் சளியை முழுவதுமாக விரட்டும் கற்பூரவள்ளி

mexican mint in tamil

இருமல், சளி போன்ற நோய்களுக்கு கற்பூரவல்லி முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இது அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளடக்கியது. கற்பூரவல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டால் கற்பூரவல்லி இலைச்சாற்றில் சிறிது கல்கண்டு கலந்து கொடுக்கலாம்.

கற்பூரவள்ளி இலையை எண்ணெயில் பொரித்து அந்த எண்ணெயை தொண்டையில் தடவி வந்தால் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

கொதிக்கும் நீரில் கற்பூரவல்லி இலைச்சாற்றை சேர்த்து ஆவி பிடித்து வந்தால் இருமல் மற்றும் சளி குணமாகும்.

mexican mint in tamil

ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் பெரியவர்கள் கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம். கற்கண்டு சேர்த்தும் இலையை மென்று சாப்பிடலாம்.

கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும். மேலும் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

பல் சிதைவு, ஈறுகள் பிரச்சனை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் கற்பூரவல்லி பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற அதிகாலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுக்கலாம். இந்த சாற்றை குடித்த அரை மணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கொடுக்க கூடாது.

கற்பூரவல்லி இலைகளை வீட்டில் பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாமல் இருக்கும். தொற்றுகிருமிகளை அழிக்கும். கற்பூரவல்லி மூலிகை எளிமையாக கிடைக்கும். எல்லா காலங்களிலும் இவை செழித்து வளரக்கூடியது.

Leave a Reply

You May Also Like