Search
Search

கருணைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

karunai kizhangu health benefits in tamil

கருணைக்கிழங்கில் வைட்டமின் சி., வைட்டமின் பி, பொட்டாசியம்., இரும்பு சத்துக்கள் உள்ளது. கருணைக்கிழங்கை நன்றாக வேக வைத்து சமைக்க வேண்டும். இல்லையென்றால் நாக்கில் அரிப்பு ஏற்படும்.

வேறெந்த கிழங்குகளிலும் இல்லாத அளவுக்கு கருணைக்கிழங்கில் அதிக மருத்துவகுணங்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

karunai kilangu benefits in tamil

கருணைக்கிழங்கு லேகியம் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பிரசித்தி பெற்றது.

கோடை காலங்களில் கருணைக்கிழங்கை சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வரலாம். உடல் வெப்பத்தையும் மூலசூட்டையும் நீக்கும் சக்தி கருணை கிழங்கில் உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது. மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும்.

கருணை கிழங்கில் உள்ள புரதம், வைட்டமின் ஏ ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் வரவிடாமல் தடுக்கிறது.

அல்சரை குணப்படுத்தும் மருந்து கருணைக்கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

வாரம் ஒரு முறை கருணைக்கிழங்கை மசியல் அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

You May Also Like