Search
Search

சுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?

தேவையானவை:

பாசுமதி அரிசி – 1/2 கிலோ,
நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்,
நறுக்கிய பைனாப்பிள் – 1/2 கப்,
சீட்லெஸ் கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை – தலா கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்,
எண்ணெய் – 50 மில்லி,
நெய் – 100 மில்லி,
தண்ணீர் – 600 மில்லி,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

அரிசியை நன்றாக கழுவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலைகளை போட்டு நன்கு தாளிக்கவும்.

அதோடு வெங்காயம், இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். அதன் பிறகு ஊற வைத்த பாசுமதி அரிசி போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். சாதம் வெந்த பிறகு நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.

அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, சிறு தீயில் மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து தம் போடவும்.

பிறகு சாதத்தைக் கிளறி, ஆப்பிள், பைனாப்பிள், கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Leave a Reply

You May Also Like