“உன்னை கைவிடாது இந்த கலை”.. பாலாவிற்கு ஐந்து பாடல்கள் – பாராட்டிய கவிப்பேரரசு

தனித்துவம் என்ற சொல்லுக்கு உருவம் கொடுத்தால் அது இயக்குனர் பாலாவை போல இருக்கு என்றால் அது சற்றும் மிகையல்ல. அந்த அளவிற்கு இயல்பான திரைக்கதையை தாண்டி, தான் நினைத்ததை படமாக்கும் ஒரு சிறந்த இயக்குனர் அவர்.
சியான் விக்ரம் அவர்களை வைத்து 1999ம் ஆண்டு அவர் இயக்கி வெளியிட்ட சேது என்ற திரைப்படம் விக்ரம் மற்றும் பாலாவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திரைப்படம். அவர்கள் இருவருக்குமே தங்கள் வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்து ஒரு திரைப்படம்.
அதன் பிறகு தொடர்ச்சியாக நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் மற்றும் பரதேசி என்று பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் அவர். இதுவரை 9 திரைப்படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்ற பொழுதும் ஒவ்வொன்றும் அவர் பெயர் சொல்லும்.
தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநர் இவர் என்பதும் பெருமைக்குரிய விஷயம். இந்நிலையில் இப்பொது அவர் வணங்கான் என்ற திரைப்படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்த படத்திற்கு பாடல் வரிகள் அமைக்கும் பணியை ஏற்றுக்கொண்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பாலாவை பாராட்டி உடம்பில் தினவும், உள்ளத்தில் கனவும், உள்ளவனைக் கைவிடாது கலை என்று அவர் பாணியில் கவிதை மாலை சூட்டி பாராட்டியுள்ளார்.