பாஜக தலைவர் வெட்டிக்கொலை : ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் கே எஸ் ஷான் ஆலப்புழாவில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஷான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கொலை செய்துவிட்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே. ஃபைசி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் மற்றும் ஓ.பி.சி. மோர்ச்சா மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ரஞ்சித்தின் தொடை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.
எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் கே.எஸ் ஷான் இறந்த அடுத்த நாளே பா.ஜ.க தலைவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது பழிவாங்கும் நோக்கத்தினால் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அங்கு ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.