கிட்னி பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிட்னி பீன்ஸை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறலாம். கிட்னி பீன்ஸ் சுவையை தருவது மட்டுமல்லாமல் அதிக ஊட்டச்சத்தையும் தருகிறது. இதனை சிவப்பு காராமணி அல்லது ராஜ்மா என்று கூறுவார்கள்.

கிட்னி பீன்ஸை இரவே ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை சமைக்கவேண்டும் அப்போது தான் அதன் முழு பலன் கிடைக்கும்.

கிட்னி பீன்ஸில் நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் B1 போன்ற உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் இதில் 9% புரதம் உள்ளது. இதனால் நான்-வெஜ் சாப்பிடாதவர்களுக்கு தேவையான புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.

கர்ப்பிணிகள் கிட்னி பீன்ஸை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், இரும்பு, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் குழந்தை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக வளருவார்கள்.

பெருங்குடல் புற்றுநோய் உலகில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். கிட்னி பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும்.

கிட்னி பீன்ஸில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலில் கார்போஹைட்ரேட் அதிகம் சேர்வதை தடுக்கிறது.

பீன்ஸை தவறாமல் உட்கொள்ளும் மக்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய பிரச்சனைகள் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Recent Post