குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

வெள்ளை குதிரை கனவில் வந்தால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். கருப்பு குதிரை கனவில் வந்தால் உங்களிடம் திறமை இருப்பதை குறிக்கும்.

பழுப்பு (brown) நிற குதிரைகள் கனவில் வந்தால் வெற்றியை அல்லது சுதந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கான அவசியத்தைக் குறிக்கும்.

கனவில் குதிரை கடித்தால் நீங்கள் பதவி உயர்வு பெறுவீர்கள் என்பதை அது வெளிப்படுத்துகிறது.

Advertisement

குதிரைகள் அதிகம் இருப்பது போல கனவு வந்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

குதிரை ஓடுவது போல கனவு வந்தால் நீங்கள் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

குதிரை பின்னோக்கி சவாரி செய்வது போல கனவு வந்தால் அது மோசமான சம்பவங்கள் நடக்கப்போவதை குறிக்கிறது.

குதிரையிலிருந்து கீழே விழுவதைப் போல கனவு வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதை குறிக்கிறது.

குதிரை உங்களை உதைப்பது போல கண்டால் நீங்கள் அதிகம் விரும்பும் ஒருவரால் புறக்கணிக்கப்படுகிறீர்கள் என்பதை குறிக்கும்.

குதிரை கடிப்பது போல கனவு வந்தால் பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

ஒரு குதிரையை வாங்குவது போலவோ அல்லது விற்பது போலவோ கனவு கண்டால் நீங்கள் மிகவும் நம்பும் ஒருவரால் ஏமாற்றப்படலாம் என்பதை குறிக்கிறது.

குதிரையை தாக்குவது போல கனவு வந்தால் நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் சிக்கல் ஏற்படும்.

குதிரை பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுவது போல கனவு வந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும்.