Connect with us

TamilXP

உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் குதிரைவாலி

மருத்துவ குறிப்புகள்

உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் குதிரைவாலி

குதிரைவாலி புற்கள் வகை சேர்ந்தது. இது புன்செய் பயிராகும். இந்த குதிரைவாலிக்கு புல்லுச்சாமை என மற்றொரு பெயரும் உண்டு. இதனை ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்று அழைக்கபடுகிறது.

குதிரைவாலியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும். நெல் மற்றும் மற்றும் பயிற்கள் விளையாத நிலங்களில் குதிரைவாலி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

இதில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளது. கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

100 கிராம் குதிரைவாலியில் புரதசத்து 6.2கி, கொழுப்பு சத்து 2.2கி, தாது உப்புகள் 4.4கி, நார்ச்சத்து 9.8கி, மாவுச்சத்து 65.5கி, கால்சியம் 11 மி.கி, பாஸ்பரஸ் 280 மி.கி அடங்கியுள்ளது.

செரிமான பிரச்சனைகள், ரத்த சோகை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மேலும் சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை அதிகமாக பெருக செய்கிறது. மேலும் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் குதிரைவாலியில் அதிகமாக உள்ளது.

குதிரைவாலியில் ஊட்டச்சத்துகள் மிகுந்த நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் உள்ள மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை வெளியிடுவதற்கு பெரிது உதவுகிறது. நோயளிகள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக பயன்பட்டு வருகிறது.

அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடவேண்டும். தினமும் சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல் ஏற்படாமல் இருக்கும்.

உடல் உறுப்புகளை தூய்மையாக்க பெரிதும் பயன்படுகிறது. நல்ல ஆண்டி ஆக்சிடன்னாக செயல்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

To Top