Search
Search

மொத்தம் 2000 டான்சர்ஸ்.. பிரம்மாண்டமாக ஒரு பாட்டு – “லியோ” கமிங் சூன்!

பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கும் ஒரு மாபெரும் திரைப்படமாக உருவாகி வருகிறது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ. சுமார் 250 முதல் 300 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட ஒரு மாபெரும் திரைப்படமாக இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

அனிரூத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா இந்த படத்தின் ஒளிப்பதிவு வேலைகளை பார்த்து வருகிறார். பிலோமென் ராஜ் இந்த படத்தின் படத்தொகுப்பாளராக உள்ள நிலையில் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச இயக்குனராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

தளபதி விஜயுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா. மேலும் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூரலிகான், கதிர், பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் தாமஸ், ஐயா மனோபாலா மற்றும் ஜார்ஜ் மரியான் என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாலமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் தற்பொழுது உருவாகி வருகிறது என்றும், சுமார் 2000 குரூப் டான்சர்கள் இந்த பாடலில் நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலை நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like