Search
Search

லிப்ட் திரை விமர்சனம்

lift movie vimarsanam

கவின் ராஜ், அம்ரிதா இப்படத்தில் நடித்துள்ளனர். வினீத் வரப்பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இப்படம் OTTயில் வெளியாகியுள்ளது.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கவின் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் கட்டிடத்திலிருந்து ஒரு பெண் கீழே குதித்து இறந்துபோகிறார். அதே ஐடி நிறுவனத்தில் கவின் டீம் லீடராக பணியில் சேர்கிறார்.

பணியில் சேர்ந்த முதல் நாள் இரவில் கவின் சில அமானுஷ்யமான விஷயங்களை சந்திக்கிறார். அந்த நிறுவனத்தில் உள்ள லிப்ட் மூலம் வெளியே செல்ல முயற்சிக்கிறார். ஆனால் அவரால் செல்ல முடியவில்லை. படிக்கட்டு வழியாக வெளியே செல்ல முயற்சிக்கிறார் அந்த முயற்சியும் தோல்வி அடைகிறது. இதனால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் கவின் மாட்டிக்கொள்கிறார்.

அதே நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆக பணிபுரியும் அமிர்தா ஐயரும் ஒரு அறையில் மாட்டிக் கொள்கிறார். இவர்களை காப்பாற்ற வந்த செக்யூரிட்டி இருவரும் இவர்களின் கண்முன்னே தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இறுதியில் இவர்கள் எப்படி தப்பித்தார்கள்? அந்தப் பெண் கீழே குதித்து இறந்து போக காரணம் என்ன? என்பதுதான் படத்தின் கதை.

lift movie vimarsanam

படத்தில் கவின், அமிர்தா ஐயர் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் இல்லை. படம் முழுவதும் விறுவிறுப்பாக செல்கிறது.

சமீபகாலமாக வெளியாகும் பேய் படங்கள் காமெடி படமாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த படம் சற்று வித்தியாசமானது. ஐடி ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவற்றை இப்படத்தில் தெளிவாக காட்டியுள்ளனர். படத்தில் முதல் பாதி சற்று பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

பிரிட்டோ மைக்கேலின் பின்னணி இசை படத்திற்கு பொருந்தியுள்ளது. யுவ குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

Leave a Reply

You May Also Like