Search
Search

இருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை

இந்த முத்திரையை செய்வதற்கு பத்மாசனம், வஜ்ராசனம் சிறந்தவையாகும்.

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து, கை விரல்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொள்ளுங்கள். இடதுகை கட்டை விரல் மட்டும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். மற்ற கை விரல்களினால் கைகளின் பின்புறத்தை அழுத்த வேண்டும்.

வலது கை கட்டை விரல், இடது கை கட்டை விரலின் அடிப்பகுதியை அழுத்த வேண்டும். அதன் பிறகு வலது கை கட்டை விரலை நிமிர்த்தி, அதன் அடிப்பகுதியில் இடது கை கட்டை விரலால் அழுத்த வேண்டும்.

linga muthirai in tamil

இப்படி இரண்டு கட்டை விரல்களிலும் மாற்றி மாற்றி 48 நிமிடங்கள் செய்தல் வேண்டும். இந்த முத்திரையை அதிகாலையிலும் இரவுகளிலும் செய்ய வேண்டும். வயிற்றில் கட்டி இருந்தால் இந்த முத்திரையை செய்யக் கூடாது.

லிங்க முத்திரையின் பலன்கள்

  • இருமலை போக்கும்.
  • ஆஸ்துமா ஜலதோஷம் நீங்கும்.
  • சைனஸ் மற்றும் பக்கவாதத்தை குணப்படுத்தும்.
  • உடல் கோளாறுகள் நீங்கும்.
  • உடலுக்கு வலிமை அளிக்கும்.

Leave a Reply

You May Also Like