லியோ படம் LCUவில் இருக்கா?.. இல்லையா? – லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இயக்குனரின் வசம் அது இருந்து வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமா ஒரு இயக்குனரின் வசம் உள்ளது என்று கூறினால் அது லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான்.
LCU என்று அழைக்கப்படும் Lokesh Cinematic Universe தான் இப்பொது ட்ரெண்டிங்கில் உள்ள ஒரு புதிய டாபிக். கைதியின் படத்தை இணைத்து அவர் விக்ரம் படம் வெளியிட்டதும் இந்த ட்ரெண்ட் செட் ஆனது என்றே கூறலாம்.
இந்நிலையில் LEO படமும் அந்த LCUவில் வருமா? என்ற ரசிகர்களின் கேள்வி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய லோகேஷிடன் இந்த கேள்வியைக் கேட்ட பொழுது “படம் வெளிவர இன்னும் பல மாதங்கள் உள்ளது, அக்டோபர் மாதம் தான் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது”, “ஆகையால் இந்த ஆறு மாத காலத்திற்குள் நிறைய விஷயங்கள் பற்றி நான் உங்களுக்கு வெளியிடுவேன்”.
“ஆகவே LEO படம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் திருஷாவையும் நீங்கள் இதே கேள்வி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் அவரிடம் நானும் சொல்லிவிட்டேன் அவர் கூறப்போகும் பதிலும் இதுதான் என்று நகைப்புடன் கூறினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் LEO திரைப்படம், சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.