மனிதன் சுவாசிக்க மூச்சு மிக அவசியமானது. நமது உயிர் மூச்சு சீராக இருக்க காரணம் நுரையீரல்தான்.
கொரோனா போன்ற வைரஸ் தொற்றுக்கள் பரவும் போது அதிகமாக பாதிக்கப்படுவது நுரையீரல்தான். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பூண்டு
தினசரி உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற சத்து நுரையீரலில் ஏற்படும் தொற்று வியாதிகளை அழிக்கும். மேலும் நுரையீரல் புற்றுநோய் வருவதையும் தடுக்கும்.
இஞ்சி
சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் சக்தி இஞ்சிக்கு உள்ளது. இது நுரையீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும். இஞ்சியை நசுக்கி 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடித்து வருவது நுரையீரலுக்கு நல்லது.
துளசி
துளசி சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தரும் ஒரு மூலிகை. தினமும் பத்து துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், நுரையீரல் பலப்படும்.
ஆடாதொடை
ஆடாதொடை இலையை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் ஆடாதொடை பொடியுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பாலில் மிளகுத்தூள்
பாலை நன்றாக காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து குடித்து வந்தால் நுரையீரலுக்கு பலம் கிடைக்கும். மேலும் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.