Search
Search

கொரோனாவை வென்ற 100 வயது பாட்டிக்கு உற்சாக வரவேற்பு

கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே எளிதில் தாக்கும் எனவும் அவர்கள் நோய்த் தொற்றால் இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் உலக நாடுகள் கூறுகின்றன. ஆனால் 90 வயது 100 வயது உடையவர்களும் குணமாகி வீடு திரும்பும் செய்தியை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதே போல் இந்தியாவிலும் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சாந்தா பாய் என்ற 100 வயது மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வந்த சாந்தா பாய், கொரோனாவை முழுமையாக வென்று குணமானார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த அவருக்கு, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Leave a Reply

You May Also Like