Search
Search

சென்னையில் வேகமாக பரவும் ’மெட்ராஸ் ஐ’

‘மெட்ராஸ்‌ – ஐ’ எனப்படும்‌ கண்‌ தொற்று நோய்‌ பாதிப்பு தற்‌போது பரவி வருகிறது. குழந்தைகளுக்கும்‌, முதியவர்களுக்கும்‌ அதிக அளவில்‌ ஏற்படுவதாக கண்‌ மருத்துவர்கள்‌ தெரிவித்துள்ளனர்‌.

விழியையும்‌, இமையையும்‌ இணைக்கும்‌ ஐவ்வு படலத்தில்‌ ஏற்படும்‌ வைரஸ்‌ தொற்றுதான்‌ ‘மெட்ராஸ்‌ – ஐ’ எனக்‌ கூறப்படுகிறது.

மெட்ராஸ் ஐ பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் கைகுட்டை போன்ற பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கும் தொற்று பரவும். ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் வர அதிக வாய்ப்பு உண்டு.

மெட்ராஸ்‌ – ஐ’ எளிதில்‌ குணப்படுத்தக்கூடிய மிகச்‌ சாதாரணமான நோய்த்‌ தொற்றுதான்‌. ஆனால்‌, அதனை முதலிலேயே கண்‌டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்‌. காலந்தாழ்த்தி அலட்சியம்‌ செய்தால்‌ பார்வையில்‌ தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்‌ என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

You May Also Like