Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மதுரை அழகர் கோவில் வரலாறு

madurai alagar kovil varalaru

ஆன்மிகம்

மதுரை அழகர் கோவில் வரலாறு

ஊர் -அழகர் கோயில்

மாவட்டம் -மதுரை

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -பரம சுவாமி

தாயார் -ஸ்ரீதேவி பூதேவி

தல விருட்சம்– ஜோதி விருட்சம் ,சந்தனமரம்.

தீர்த்தம் -நூபுர கங்கை

திருவிழா -சித்திரை திருவிழா பத்து நாட்கள் ,ஆடிப் பெருந்திருவிழா 13 நாள் ,ஐப்பசி தலை அருவி உற்சவம் மூன்று நாள் ,இவை தவிர வைகுண்ட ஏகாதசி ,கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி ,பொங்கல் ,தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு வாரத்தின் சனி, ஞாயிறு கிழமைகள் மற்றும் மாதந்தோறும் இக்கோயிலில்
திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

திறக்கும் நேரம் -காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம் ஆகும்.

madurai alagar kovil varalaru

அழகர் கோவில் தல வரலாறு

ஒரு சமயம் எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபத்தை போக்க பூலோகத்தில் தற்போது உள்ள அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தவம் புரிந்தார். இது ஏழு மலைகளை கொண்டது. தர்மராஜனின் தவத்தை மெச்சி பெருமாள் காட்சி கொடுத்தார்.

இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினமும் உங்களை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். பெருமாளும் அவ்வாறே வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் அர்த்தஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம் முதல் இடத்தையும் காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் 3வது இடத்தை அழகர் கோயிலும் பெற்றுள்ளன. அழகர்கோவில் மூலவர் பரமசாமி ஸ்ரீதேவி ,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் தான் பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் அழகாக இருப்பார் .தாயார் அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள் .இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவரின் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் கள்ளழகர் ஆனார் .இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமென கருதப்படுகிறது.

பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலை குகைக்குள் வற்றாத ஜீவநதியாக வந்துகொண்டிருக்கிறது.

மக்களின் காணிக்கையாக வரும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை இட்டு பிரசாதமாக தரப்படுகிறது. இது இக்கோயிலுக்கான தனிச் சிறப்பும் புகழும் உடையது .அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள். இத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் .இங்கு புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதாக தலவரலாறு உள்ளது.

அழகர் கோயில் முகவரி
Sri Kallazhagar Temple, Azhagar Kovil (Po.),
Madurai (Dt). PIN – 625 301.
Telephone Number 0452 – 2470228.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top