ஹனுமானாக மாறும் மகேஷ் பாபு.. மிக பிரம்மாண்டமாக உருவாகும் கதை – ராஜமௌலி பராக்!

ராஜமௌலி, இந்திய திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஒரு நல்ல இயக்குநர். குறிப்பாக மகதீரா துவங்கி பாகுபாலி மற்றும் RRR போன்ற period திரைப்படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் அவர் என்றே கூறலாம்.
இந்நிலையில் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவிருக்கிறார் ராஜமௌலி, மகேஷ் பாபு சென்னையில் பிறந்து இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக வளம் வரும் ஒரு மாபெரும் நடிகர். அடிக்கடி இவரை நம்ம தளபதி விஜய்யுடன் ஒப்பிடுவது வழக்கம்.
தற்போது அவர் நடிக்கவிருக்கும் 29வது படம் ஒரு இதிகாச திரைப்படமாக உருவாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்கா நாட்டில் உள்ள ஒரு காட்டில் தான் இந்த படம் உருவாக்கப்படவுள்ளதாக, 2025ம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் மகேஷ் பாபு, கடவுள் ஹனுமானின் கதாபாத்திரை ஏற்று நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஹனுமான் தான் வாழும் வனத்தை காப்பவர் என்ற பொருள்படும்படி இந்த படம் உருவாக உள்ளது என்றும் கூறபடுகிறது.
மகேஷ் பாபு மற்றும் ராஜமௌலி ஆகிய இருவருக்கும் தமிழிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.