அட இப்படி கூட விளம்பரம் செய்யலாமா?.. “குட் நைட்” படக்குழுவின் வித்யாசமான முயற்சி!

சினிமா எடுக்க துவங்கிய காலத்தில் வருடத்திற்கு 10 படங்கள் வெளியானால் அது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது, அதன் பிறகு தமிழ் சினிமா வளர வளர மாதத்திற்கு 10 திரைப்படங்கள் என்பதை தாண்டி மாதத்திற்கு 25 படங்கள் வரை வெளியானது.
ஆனால் தற்பொழுது உள்ள சூழலில் ஒவ்வொரு நாளும் ஓரிரு படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது, அப்படியென்றால் வெளியாகும் படங்களுக்கு இடையேயான போட்டியும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அப்படி போட்டி பெரிய அளவில் இருக்கையில், தங்களுடைய படைப்புகளை மக்களிடம் நிச்சயம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் படைப்பாளர்கள் அனைவரிடமும் இருக்கத்தான் செய்யும். அதற்கு அவர்கள் தற்பொழுது கையாண்டு வரும் ஒரு மாபெரும் யுக்தி தான் சமூக வலைதளங்களில் நடத்தப்படும் விளம்பரங்கள்.
அந்த வகையில் பிரபல நடிகர் மணிகண்டன் அவர்களுடைய “குட் நைட்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் மிகவும் துரிதமாக நடந்து வருகிறது. ஒரு மனிதன் குறட்டை விடுவதினால் அவனுடைய காதல் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறும் என்பதை நகைச்சுவையோடு கூற வரும் திரைப்படம் தான் குட் நைட்.
இதில் அந்த பட ப்ரமோஷனுக்காக தற்பொழுது பல விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர் படக்குழுவினர். YouTube மூலம் பிரபலமான பரிதாபங்கள் சேனல் (Good Night Special காணொளி பரிதாபங்கள் சேனலில் உள்ளது) வழியாகவும், குறட்டையை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மெனுவை வெளியிட்டும் அவர்கள் விளம்பரப் பணிகளை நடத்தி வருகின்றனர்.
வருகின்ற மே 12ம் தேதி குட் நைட் சொல்ல விடியற்காலையில் வருகின்றார் மணிகண்டன், மிஸ் பண்ணாம பாருங்க. நல்ல திறமையை ஆதரிப்போம்!