குறட்டையால் வந்த கொடுமை.. கவனம் ஈர்க்கும் மணியின் குட் நைட் டீசர்!

மணிகண்டன், கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமா கண்டெடுத்த ஒரு அற்புத முத்து என்றால் அது சற்றும் மிகையல்ல. எழுத்தாளராக தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், பின்னாளில் ஒரு சிறந்த நடிகராக மாறியுள்ளார் எனலாம்.
8 தோட்டாக்கள், காலா, விக்ரம் வேதா மற்றும் விசுவாசம் போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு போற்றப்பட்டது. ஆனால் இவருக்கான பிரேக் கிடைத்த படம் ஜெய் பீம் தான், ராஜா கண்ணு என்ற அந்த கதாபாத்திரம், சினிமா காதலர்களின் நெஞ்சி ஒரு நீங்காத வடு.
அந்த படத்திற்காக அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் பலர் நெஞ்சில் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றது. அந்த அளவிற்கு ஒரு நேர்த்தியான நடிகன், தற்போது இவர் நடிப்பில் “குட் நைட்” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
தற்போது அந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது, குறட்டை ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்லும் ஒரு அழகிய காதல் கதையாக இருக்கும் என்று நினைக்கிறன். வாழ்த்துக்கள் மணிகண்டன்.