எப்போவுமே யோசிச்சுகிட்டே இருக்காருப்பா இவரு – விறுவிறுப்பாக நடக்கும் PS 2 பின்னணி இசை பணிகள்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திலிருந்து நேற்று முதல் சிங்கள் “அகநக” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. முதல் பாகத்திலேயே இந்த பாடலின் வரிகள் அவ்வப்போது முணுமுணுக்கப்பட்டதை நாம் அறிவோம்.
இந்நிலையில் தற்போது இருந்த பாடலின் முழு நீள வடிவம் தற்போது வெளியாகியுள்ளது, மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான பின்னணி இசை (BGM) அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. லண்டனில் உள்ள ஒரு இசை அரங்கத்தில் இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இசைப்புயல் ரகுமான் மற்றும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினம் ஆகிய இருவரும் பின்னணி இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
அக நக பாடலை போலவே இன்னும் நான்கு பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 28ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கே உரித்தான சீரியஸ் modeல் பணிகளை கவனித்து வருகின்றார் மணிரத்னம்.