Search
Search

நரம்புகளுக்கு வலுவூட்டும் சம்பா அரிசி

mappillai samba rice health benefits in tamil

பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்து கொண்டோமேயானால் அதில் நிறைய ரகங்கள் இருக்கிறது. அதில் ஒன்று சம்பா அரிசி. இந்த அரியில் உள்ள மருத்துவ குணங்கள், இதனால் நமக்கும் கிடைக்கும் பயன்கள் என்ன என்று தற்போது பார்ப்போம்.

இந்த அரிசி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் புரதம்,நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் தாராளமாக உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் நமது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.

mappillai samba rice health benefits in tamil

நம் முன்னோர்கள் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்துள்ளார்கள். ஏன் என்றால் ஆண்மையை அதிகரித்து, உடலுக்கு பலம் கொடுக்கும் . இதனால் தான் நம் முன்னோர்கள் இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வைத்தனர்.

சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது.

இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்து இந்த அரிசியில் இருப்பதால், புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

இந்த அரிசியின் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி சூப்பராக இருக்கும். வயிற்றுப்புண், வயிறுவலி, வாய்ப்புண் குணமாகும்.

இட்லி, தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் பலன் நிறைவாகவே கிடைக்கும்.

You May Also Like