Search
Search

“இது மாரி செல்வராஜ் யூனிவெர்ஸ்”.. வைரலாகும் வைகை புயல் கையில் உள்ள Tattoo!

மாமன்னன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரபல நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பாஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் வைகைப்புயல் வடிவேலு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக காத்திருக்கும் ஒரு திரைப்படம்.

இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு வடிவேலு கையில் துப்பாக்கி, உதயநிதி கையில் கத்தியுடனும் இருக்கும் போஸ்டர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் ஆயிரம் மடங்கு அதிகமாகி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் வடிவேலு அவர்களுடைய கையில் ஒரு Tattoo இருப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த Tattooவில் இருப்பது வேறு யாரும் அல்ல, அது எம ராஜனின் படம், அதாவது கர்ணன் படத்தில் இறந்துபோன எம ராஜனின் புகைப்படம்.

ஏற்கனவே மாரி செல்வராஜ் அவர்களுடைய இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் எம ராஜன் என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்த நடிகர் லால் அவர்களின் ஒரு reference மாமன்னன் படத்திலும் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. Flash Back கட்சியில் லால் நடித்திருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

You May Also Like