விரைவில் வெளியாகும் மார்க் ஆண்டனி.. டக்கர் தகவல் சொன்ன விஷால் – வீடியோ உள்ளே!

மார்க் ஆண்டனி, விஷால் மூன்று வேடங்கள் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து கலக்க உள்ள ஒரு ஆக்ஷன் திரைப்படம். வெறும் 31 வயதே நிரம்பிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். நேர்கொண்ட பார்வை, K 13 மற்றும் கோப்ரா ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மார்ச் 3ம் தேதி வெளியான பிரபுதேவா அவர்களின் பகிரா திரைப்படத்தை இயக்கி வெளியிட்டதும் இவர்தான். இந்நிலையில் விஷால் மற்றும் பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களை வைத்து மார்க் ஆண்டனி என்ற Period படம் ஒன்றை தற்பொழுது இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக இருந்த நிலையில், நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அந்த நிகழ்வை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள், அந்த வீடியோ தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.