Search
Search

முகத்தில் மாஸ்க்.. குதிரைக்கு அருகில் ஒரு நாய் – Kனு டைட்டில் ஆரமிக்கும்னு வேற அவர் சொல்றாரு!

சிறுத்தை சிவா என்ன யோசித்து வைத்திருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். உண்மையில் இந்த டிஜிட்டல் காலத்தில் இந்த வகை ப்ரமோஷன்கள் நிச்சயம் அவசியம் என்று தான் கூறவேண்டும். அய்யா H. வினோத் சொன்னது போல மக்கள் எதிர்பார்ப்பதை மட்டுமே வியாபாரம் செய்யும்.

பல கோடி ரூபாய் பொருட்செலவில் வெகு விமர்சையாக உருவாக உள்ள திரைப்படம் தான் சூர்யாவின் 42வது திரைப்படம். ஸ்டூடியோ க்ரீன் பேனரில் ஞானவேல் ராஜா தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் படமாக இது மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான படத்தின் ஒரு போஸ்டர் இன்னும் அதிக அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். ஒரு போர் வீரன் முகத்தில் ஒரு முகமூடியை அணிந்துகொண்டு, தான் அமர்ந்திருக்கும் குதிரைக்கு அருகில் ஒரு நாயுடன் போருக்கு செல்வது போன்ற அந்த காட்சி உண்மையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் உசுப்பிவிட்டுள்ளது.

இதுபோதாதென்று, நம்ம அண்ணன், கிரிட்டிக் கண்ணன் பிரசாந்த் அவர்கள் இந்த படத்தின் பெயர் மிக மிக வித்தியாசமானது. அதுமட்டுமல்லாமல் K என்று தான் டைட்டில் துவங்கவுள்ளது என்று கூறி இன்னும் அந்த ஆர்வத்தை அதிகரித்துள்ளார்.

You May Also Like