காஷ்மீரில் நிலநடுக்கம் : லியோ படப்பிடிப்பு தலத்தில் என்ன நடந்தது?

இன்று நள்ளிரவில் 7.7 ரிக்ட்டர் அளவில் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மையங்கள் அளிக்கும் தகவலின்படி இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள சில இடங்களில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட நிலா அதிர்வு காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பல வீடுகள் இடிந்து தரைமட்டமாமாகியுள்ளன.
இந்நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பில் இருந்த லியோ படவுக்குழுவிற்கு என்ன ஆனதோ என்று பலரும் கவலை கொண்டிருந்த நேரத்தில் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் அனைவரும் எந்த பாதிப்பும் இன்றி நலமாக இருப்பதாக” கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக உலக அளவில் பல இடங்களில் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.