மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!

மீன் எண்ணெய் மாத்திரை இன்று மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்கிறார்கள். இதில் உள்ள நன்மைகள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மீன் எண்ணெய் மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

மீன் எண்ணெய் மாத்திரையில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 12, ஒமேகா 3 போன்ற சத்துக்கள் இருக்கிறது.

இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலிலுள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால் குறையும்.

மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உடல் வீக்கங்கள் குறைகிறது.

மீன் எண்ணெய் மாத்திரைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ சத்து கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடைந்து, மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வு தரும்.

மீன் மாத்திரைகள் சாப்பிடுவதால் இதயத்திற்கு பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

சரும பாதுகாப்பிற்கும் காயங்களை விரைவில் குணமாக்குவதற்கும் மீன் எண்ணெய் பயன்படுகிறது.

மீன் எண்ணெய் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும். சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாகும்.

மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் மூளையை நன்கு சுறுசுறுப்போடு வைத்திருக்கும். இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மீன் மாத்திரை சாப்பிட கூடாது.

இந்த மாத்திரைகளை தினமும் சாப்பிடலாமா? அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாமா? என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

Recent Post