கஞ்சா புகையை சாய் பாபாவின் முகத்தில் விட்ட மீரா மிதுன்

சர்ச்சை நாயகி மீரா மிதுன் கஞ்சா அடித்து அந்த புகையை சாய் பாபாவின் முகத்தில் ஊதிய வீடியோ வெளியாகியிருக்கிறது.

சர்ச்சை நாயகி மீரா மிதுன் சமீபத்தில் பட்டியிலன மக்களை குறித்து கேவலமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதும் பெரும் சர்ச்சையை ஏறபடுத்திய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கு பிறகு அவர் கதறிய விடியோவும் வெளியானது.

இந்நிலையில் மீரா மிதுன் பற்றி ஜோ மைக்கேல் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்த வீடியோவில் அவர் கஞ்சா அடித்து அந்த புகையை சாய் பாபா புகைப்படத்தில் ஊதியிருக்கிறார்.

Advertisement

சாய் பாபா முகத்தில் கஞ்சா புகையை ஊதியதை பார்த்த பக்தர்கள் கொந்தளித்துவிட்டனர். சாய் பாபாவை அவமதித்த குற்றத்திற்காகவும் மீரா மிதுன் மீது வழக்கப்பதிவு செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.