மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

தற்போது மூட்டு வலி சிலருக்கு இளம் பருவத்திலயே வந்து விடுகிறது. துரித உணவுகள், சத்து இல்லாத உணவுகள், கால்சியம் பற்றாக்குறை போன்றவைகளால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் பல்வேறு பிரச்சனைகளை உண்டு பன்னுகிறது. அதில் மூட்டு வலியும் ஒன்று. இதற்க்கான வீட்டு வைத்திய குறிப்பை பார்க்கலாம்.

எலும்புக்கு கால்சியம் சத்துதான் மிக அவசியம், அதற்கு, ஒரு ஸ்பூன் அளவிற்கு கறுப்பு எள்ளை எடுத்து அரை டம்ளர் அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அந்த நீரை அடுத்த நாள் காலையில் குடித்தால் மூட்டு வலி குறையும்,.

முடக்கத்தான் கீரை, குப்பைக் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயமாக காய்ச்சி குடித்தால் வலி குணமாகும்.

Advertisement

கல் உப்பு, சுக்குப்பொடி, கரு மிளகுப் பொடி, கருப்பு உப்பு தலா ஒரு சிட்டிகை, அரை ஸ்பூன் சீரகம், 5 ஸ்பூன் இஞ்சிச் சாறு அனைத்தையும் வெண்ணெயுடன் தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மற்றும் முதுகு வலியை நீக்கும்.

சுக்கு, கருவேப்பிலை, மஞ்சள், வெந்தயம் போன்றவைகளை நன்றாக வறுத்து அதனை பொடியாக்கி, தினமும் காலை உணவு மற்றும் இரவு உணவுக்கு பிறகு 5 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டால் வலி குணமாகும்.

வாதநாராயணன் இலை, அவுரி இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி நீங்கும்.

நல்லெண்ணெய், மாட்டு நெய் தலா ஒரு ஸ்பூன், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு தலா அரை ஸ்பூன், சிறிதளவு கரும்பு சாறு போன்றவற்றை கலந்து தினம் இரவில் குடித்து வர வாதத்தை குறைப்பதோடு எலும்பு மூட்டு இணைப்பையும் பாதுகாக்கிறது.

தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை மிதமாக சூடாக்கி அதில் கற்பூரத்தை போடுங்கள், அது முழுவதும் கரைந்தவுடன் அதனை மூட்டுகளில் நன்றாக தொடரந்து தடவ வலி குறையும்.

மருந்தாக பயன்படுத்த…

கடுகு கீரையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலமாக காய்ச்சி வலி இருக்கும் இடத்தில் தடவிக் கொண்டால் மூட்டு பிரச்சனை தீரும்.

கசகசா, துத்தி இலை இரண்டையும் ஒன்றாக அரைத்து அதனை மூட்டுகளில் பூசினால் வலி குணமாகும்.

இது போன்று சித்த மருத்துவம் குறிப்புக்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.