மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் முலாம் பழத்தின் பயன்கள்

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழம் முலாம் பழம். இப்பழத்தில் முழுமையாக 95% தண்ணீர் சத்து நிறைந்துள்ளது. தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் நாக்கு வறட்சியை உடனடியாக போக்கி, உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதை கிர்ணி பழம் என்றும் பெரும்பாலானோர் அழைப்பார்கள். இப்பழத்தினை ஆங்கிலத்தில் Muskmelon என்று அழைப்பார்கள்.

இப்பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சதைபகுதியைமட்டும் ஜூஸ் தயாரித்து பருகினாலும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். நாவிற்கு சுவையையும், மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கும்.

கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தினை தரும் முன்று முக்கியமான பழங்களில் முலாம் பழம் முக்கயமானவை. மற்றவை தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்.

Advertisement

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முலாம் பழத்தின் மருத்துவ பயன்கள்

Mulampalam Benifits Tamil
Mulampalam

ஜீரணம் ஆக

நாம் சாப்பிட்ட உணவு சில நேரங்களில் ஜீரணம் ஆகாமல் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அந்த சமயத்தில் முலாம் பழம் சாற்றுடன் சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொண்டால் உடனடியாக தீர்வை அளிக்கும். ஜீரணத்தை அதிகப்படுத்த சிலர் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். மாத்திரைக்கு பதிலாக இப்பழத்தை எடுத்துக் கொண்டால் ஜீரணமும் ஆகும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இளைமையை பாதுகாக்கும்

முலாம் பழத்தில் அதிகம் உள்ள வைட்டமின் சியும், பீட்டா கரோட்டீனும் ஃப்ரீராடிக்கல் திரவம் அதிகம் சுரப்பதை கட்டுபடுத்துகிறது. ஃப்ரீராடிக்கல் அதிகம் சுரந்தால் செல்களை சிதைத்து முதுமை தோற்றத்தையும், தோல் சம்பந்தமான நோய்களையும் உருவாக்குகிறது. எனவே, முலாம்பழம் உடலில் உள்ள செல்களை பாதுகாப்பதோடு தோல்களை பாதுகாக்கிறது. இளமையும் அதிகரிக்கிறது.

கர்ப்பபையை பாதுகாக்கிறது

தினமும் முலாம்பழச்சாறு அருந்தினால் இதில் அதிகமாக உள்ள கரோட்டீன் சத்து கருப்பையின் உடபுறத்தில் உண்டாகும் புற்றுநோயை அழிக்கும் சக்தி கொண்டது. பிர்மிங்க்ஹாமில் உள்ள பொது சுகாதாரப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் முலாம்பழச்சாறு எடுத்து கொள்பவர்களுக்கு கருப்பைப் புற்று நோய் வர வாய்ப்பு 27 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

மலச்சிக்கலை போக்கும்

முலாம் பழத்தை பேதி மாத்திரை போல் பயன்படுத்தலாம். சிலர் மலச்சிக்கலை போக்க பேதி மாத்திரை பயன்படுத்துகிறவர்கள் மாற்றாக இப்பழத்தினை பயன்படுத்தலாம்.

100 கிராம் முலாம் பழத்தோடு இரண்டு சிட்டிகை மிளகுபொடி, இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, ஒரு சிட்டிகை உப்பு போன்றவற்ற கலந்து சாப்பிட்டால் அடுத்த முன்று மணி நேரத்தில் அனைத்தும் ஜீரணமாகி பேதியாக வெளியேறி குடல் சுத்தமாகிவிடும்.

மலச்சிக்கல் இல்லாதவர்கள் காலை உணவிற்கு முன்பு முலாம் பழத்தை சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் அளவு சாப்பிட்டு வந்தால் குடல் நன்றாக சுத்தமாகி விடும். மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்துவிடும்.

வயறு எரிச்சலை போக்கும்

சிலருக்கு திடீரொன வயிற்று வலி அல்லது வயிற்று எரிச்சல் உண்டாகும், அந்த சமயத்தில் முலாம்பழச்சாறு எடுத்துக்கொண்டால் அதில் உள்ள தாதுஉப்பு உடலில் தேவையற்று இருக்கும் புளிப்புதன்மை உள்ள பொருட்களை வெளியேற்றி விடும். மேலும், சிறுநீரில் கற்கள் சேராமல் இது பாதுகாக்கும்.

சொறி, சிரங்கை போக்கும்

உடலில் கடுமையான சொறி சிரங்கு உள்ளவர்கள் தினமும் இரண்டு டம்ளர் வீதம் முலாம்பழச்சாற்றை அருந்திவந்தால் சொறி சிரங்கு பிரச்சனையை விரைவாக தீர்க்கும்.

தினம் ஒரு டம்ளர் முலாம்பழம்

தினமும் ஒரு டம்ளர் அளவு முலாம்பழத்தை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாலான நோய்கள் வருவதை தடுக்கிறது. வயிறு மந்தத்தை போக்குகிறது. உடல் களைப்பை போக்குகிறது. மூளை, இருதயம், இரைப்பை போன்றவற்றை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.