ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முந்திரி பழம்

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளிருந்து குணமாக முந்திரி பழச்சாறு சாப்பிட்டால் போதும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் அநேக மருத்துவ குணங்களை கொண்டதாகவும் முந்திரி பழம் உள்ளது.

கல்லீரல்

முந்திரி பழம் சாப்பிடுவதால் கல்லீரல் உள்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது, இப்பழத்தின் சிறிய காரத்தன்மையால் கல்லீரல் உள்ளிட்ட உடலின் அனைத்து நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளை வெளியேற்றுகிறது.

கல்லீரலை பாதுகாக்கும் வீட்டு உணவுகள்

கொலஸ்ட்ரால்

முந்திரிப்பழம் சாப்பிடும் போது நமது உடலில் உள்ள கொழுப்பினை எரித்து நமக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மேலும் இதனை சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள கொழுப்புகள் சீக்கிரமாக குறையும்.

எலும்புகள்

எலும்புகளுக்கு தேவையான பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் காணப்படுகிறது. இதனை சாப்பிடுவதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய்

இப்பழத்தில் காணப்படும் சுவையான காரத்தன்மை நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் சென்று புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

மலச்சிக்கல்

நமது உடலில் நீர் சத்து குறைவதால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரச்சனை ஏற்படுகிறது. முந்திரிபழத்தை சாப்பிடும் போது இப்பழத்தில் உள்ள சார்பிட்டால் என்ற வேதிப்பொருள் உடலில் செல்கிறது. உடலில் சென்று பெருங்குடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை வழங்கி கழிவுகளை சுலபமாக அகற்ற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும்.

மலச்சிக்கலை தடுப்பது எப்படி?

தோல் பிரச்சனை

முந்திரிப்பழத்தில் உள்ள விட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தோலில் உண்டாகும் அரிப்பு, சுருக்கம், மற்றும் வெடிப்பு போன்றவற்றை போக்குகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள் அதாவது கிரீம்கள், ஷாம்பு போன்றவற்றை தயாரிக்க முந்திரிப்பழம் பயன்படுகிறது.

இதய பிரச்சனை

முந்திரி பழத்தில் உள்ள அதிகளவு பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு போன்றவற்றில் இருந்து நம்மை காக்கிறது. எனவே இதய நலத்தை விரும்புபவர்கள் முந்திரிப்பழத்தை சாப்பிடலாம்.