அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி : இறைச்சி விலைகள் உயர்வு

தீபாவளியன்று இறைச்சி எடுப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அதே நேரத்தில் நாளை தீபாவளிபண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டும் இறைச்சி கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
இதன் காரணமாக இறைச்சியின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது. மட்டன் கிலோ ரூ. 800 முதல் ரூ. 900 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் கிலோ ரூ. 240 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் ஆர்வமாக இறைச்சி வாங்கி செல்கின்றனர்.