நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

நடைப்பயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஒரு செயல்பாடாகும். உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஒரு நவீன பழக்கமாக மாறி வருகிறது. நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள்.

நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. ஆனால் நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஒரு செயல்பாடாகும்.

உங்கள் உடலில் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. உடல் பாகங்களில் ஏற்படும் மந்த நிலையை தவிர்க்கிறது. தசைகள் நேர்த்தியான வடிவம் பெறுகிறது. உடலின் தோற்றப்பொலிவு அதிகரிக்கிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைந்து சர்க்கரையின் அளவு தேவையான அளவு சேகரிக்கப்பட்டு இன்சுலின் சுரக்கப்படுகிறது.

அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையும், மாலையும் ஒரு கிலோ மீட்டர் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மற்ற உடற்பயிற்சியை விட நடைபயிற்சி செய்வது மிக எளிது.

நாம் சராசரியாக ஒரு நாளில் 2500 அடி தூரம் நடக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்கள் கம்ப்யூட்டர் பணி, எழுத்துப்பணி, வாகன ஓட்டுநர்கள் இவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் முதுகு பிடிப்பு, முதுகு வலி போன்றவை வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

நாம் நடைபயிற்சி செய்யும் போது உடலில் உள்ள செரோட்டனின் அளவு மாறுபட்டு நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வாரத்திற்கு 5 நாட்கள் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் நான்கு வாரங்களிலேயே மனச்சோர்வை முற்றிலும் அகற்றிவிடும்.

எட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன?

எட்டு போன்ற வடிவத்தை பெரிதாக தரையில் வரைந்துவிட்டு, அந்த கோடுகளின் படியே நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இன்னும் விளக்கமாக சொன்னால், பைக்கில் எட்டு போடுவதைப்போன்று, நடந்துக்கொண்டே எட்டு போட வேண்டும். இது தான் எட்டு வடிவ நடைப்பயிற்சி.

நன்மைகள்:

1. 70 வயது உடைய நபர்கள் கூட இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், 50 வயதுடையவர்களாக மாறிவிடுவார்கள்.

2. குளிர்ச்சியான நேரங்களில் வரும் தலைவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் இந்த எட்டு வடிவ உடற்பயிற்சி நீக்கிவிடும்.

3. எட்டு வடிவ உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், நீரழிவு நோயை இல்லாமலே செய்து விடலாம் என்றும் சில நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.

4. கண்பார்வை குறைபாடுகளில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல பயனை இந்த எட்டு வடிவ நடைப்பயிற்சி ஏற்படுத்தி தருமாம்.

Recent Post