நுரையீரலில் உள்ள அசுத்தமான காற்றை வெளியேற்றும் ‘நாடி சுத்தி’ பயிற்சி

வைரஸ் தொற்றுக்கள் பரவும் போது அதிகமாக பாதிக்கப்படுவது நுரையீரல்தான். அவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும். இடது கையை சின் முத்திரையில் வைத்துக்கொள்ளுங்கள். வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடது பக்கம் இழுத்து இடது பக்கம் வெளிவிடவும். இதனை 10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

lungs yoga in tamil

அடுத்தாக மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மூச்சை வெளிவிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும். பிறகு இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதையும் 10 முறை செய்ய வேண்டும்.

Advertisement

இந்த நாடிசுத்தி பயிற்சி செய்வதால் நுரையீரலில் உள்ள அசுத்தமான காற்று வெளியேறிவிடும். நல்ல காற்றை மீண்டும் நுரையீரல் உள் வாங்கும். இதனால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு இந்த மூச்சுப் பயிற்சியை பத்து நிமிடங்கள் செய்தால் நுரையீரலில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் : நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள்