நாக சைதன்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்.. ஒரு திகில் வெப் சீரிஸ் ரெடி!

பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகன் தான் நடிகர் நாக சைதன்யா, கடந்த 2009ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு 2010ம் ஆண்டு கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தமிழில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார்.
அதில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தது அவருடைய முன்னாள் மனைவி நடிகை சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சுமார் 13 ஆண்டுகள் கழித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான கஸ்டடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கான்ஸ்டபிள் சிவா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கணக்கச்சிதமாக நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் சைதன்யா. இந்நிலையில் OTT எனப்படும் இணைய தொடர்களில் நடிக்க துவங்கியுள்ளார் அவர்.
Dhootha என்ற ஒரு திகில் வெப் சீரிஸில் தற்பொழுது அவர் நடித்து முடித்துள்ளார். விக்ரம் குமார் என்பவர் இயக்கிய இந்த இணைய தொடரில் பிரபல நடிகைகள் பிரியா பவானி சங்கர் மற்றும் பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த இணைய தொடர் குறித்த அப்டேட் வெளியானது, அமேசான் ஒரிஜினல்ஸ் தயாரிக்கும் இந்த இணைய தொடர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.